states

img

மேற்கு வங்க ரயில் விபத்து - உயிரிழப்பு 15 ஆக உயர்வு

மேற்கு வங்க மாநிலத்தின் நியூ ஜல்பைகுரியில், கஞ்ஜன்ஜங்கா பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. 60 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சரக்கு ரயிலின் ஓட்டுநர் சிக்னலை கவனிக்காமல் ரயிலை இயக்கியதால் விபத்து நடந்துள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்..
விபத்தை தொடர்ந்து, நியூ ஜல்பைகுரி-உதய்பூர், திப்ரூகர் - டெல்லி, அகர்தலா - ராணி கம்லாபதி, நாகர்கோவில் - திப்ரூகர், கவுஹாத்தி -பெங்களூரு உள்ளிட்ட 24 ரயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-மும் நிவாரணம் ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
 

;